இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) தீர்மானித்துள்ளது.
இன்று (10) கூடிய ICC சபையானது, அதன் உறுப்பினர் எனும் வகையில் தனது பொறுப்புகளை இலங்கை கிரிக்கெட் மீறுவதாக தெரிவித்து இத்தீர்மானித்தை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சுயாதீன நிர்வாகம், கட்டுப்பாடு, ஒழுங்குமுறை ஆகிய அதன் விவகாரங்களில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தூரமாக்கப்பட்டுளதால், இந்த இடைநிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தடையின் நிலை பற்றி, சர்வதேச பேரவை விரைவில் தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அர்ஜுன உள்ளிட்ட இடைக்கால குழுவினர் கிரிக்கெட் நிறுவனத்திலிருந்து வெளியேறினர்
இலங்கை கிரிக்கெட் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சரவை உபகுழு