Saturday, May 25, 2024
Home » ஹோர்ட்டன் சமவெளி பகுதியில் வனாந்தரச் செய்கையை ஊக்குவிக்கும் டோக்கியோ சீமெந்து

ஹோர்ட்டன் சமவெளி பகுதியில் வனாந்தரச் செய்கையை ஊக்குவிக்கும் டோக்கியோ சீமெந்து

by Rizwan Segu Mohideen
November 9, 2023 10:54 am 0 comment

இலங்கையின் ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா, பரந்தபுல்வெளிகளையும், வானுயர்ந்த பசுமையான மழைக்காடுகளையும்கொண்டிருக்கின்றமை இயற்கை அதிசயமாக அமைந்துள்ளது. UNESCO உலக பாரம்பரிய பகுதிகளில் ஒன்றான இந்த உயிரியல்பரம்பலை கொண்ட பகுதி, உலகின் வேறெங்கும் காண முடியாதஅரிய வகை தாவர மற்றும் விலங்கினங்களின் இருப்பிடமாகவும்அமைந்துள்ளது.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்எஸ்.ஆர்.ஞானம், ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்காவுக்கானடயாகம நடைச் சுவட்டு பகுதியை, வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்துக்கு புதிய ரேஞ்ஜர் அலுவலகத்தை கையளித்துஉரையாற்றுகையில், “எமது நாட்டில் வனாந்தர நீந்தல்கலாசாரத்தின் ஆரம்பமாக இது அமைந்துள்ளது. ஜப்பானியர்களால்தமது வாழ்க்கையை தாவரங்கள் மற்றும் இயற்கையுடன் சங்கமித்துகுணமடையும் இந்த முறைமை அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. ஹோர்ட்டன் சமவெளிக்கான மிகவும் காட்சியம்சங்கள் நிறைந்தநடைப் பாதையாக இந்த பகுதியை நான் தனிப்பட்ட ரீதியில்அனுபவித்துள்ளேன். அடர்ந்த வனாந்தரப் பகுதியினூடாக நடந்துசெல்கையில் ஒப்பற்ற வனாந்தர நீந்தல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. மலை ஏறுவோர் மற்றும்சைக்கிளோட்டிகளுக்கு பிரத்தியேகமான மலைஏறல் அனுபவத்தைவழங்கும் இந்த பாதையை அமைப்பதற்கு வனஜீவராசிகள்பாதுகாப்பு திணைக்களத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ஹோர்ட்டன் சமவெளி தேசிய பூங்கா போன்ற இயற்கையானபகுதியில் காணப்படும் விஞ்ஞான ரீதியான பாதுகாப்புஅம்சங்களின் முக்கியத்துவத்தை டோக்கியோ சீமெந்துஉணர்ந்திருந்தமையினால் இந்தத் திட்டத்துடன் கைகோர்க்கதீர்மானித்தது. விருந்தினர்களுக்கு நடையாக மலையில் ஏறுவதற்குஅனுமதிக்கப்படும் ஒரே இயற்கை பகுதியாக இது அமைந்துள்ளது. பட்டிபொல அல்லது ஒஹிய பகுதிகளிலிருந்து வாகனங்களில் பலவிருந்தினர்கள் இப்பகுதிக்கு விஜயம் செய்யும் போதிலும், 5 கிலோமீற்றர் தூரமான டயாகம கிழக்கு நடைப்பாதை, இயற்கையைரசிப்போருக்கு சிறந்த விருந்தாக அமையும். இந்த மலையேறல்பகுதி, உலகப் புகழ்பெற்ற பெக்கோ வழியின் ஒரு அங்கமாகஅமைந்துள்ளது. இப்பாதையினூடாக பயணிப்போருக்குவெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த பறவை இனங்கள் மற்றும்ஹோர்ட்டன் சமவெளிக்கு மாத்திரம் உரித்துடைய அரிய பறவைஇனங்களை கண்டு களிக்கக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

அதிகளவு பிரபல்யமடையாத டயாகம கிழக்கு நுழைவாயில் பகுதிபெரும்பாலும் கண்காணிக்கப்படுவதில்லை. இதனால், அதிகளவுபின்தங்கிய நுழைவு மற்றும் வெளியேறல் பகுதியாகஅமைந்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்டளவு வளங்களைக்கொண்டிருந்த நிலையில், இந்த வழியினூடாக விருந்தினர்களின்செயற்பாடுகளை சீரமைப்பதற்கான வழிமுறைகளைவனஜீவராசிகள் திணைக்களம் நாடியிருந்தது. சூழல்சார் பாதுகாப்புசெயற்பாடுகளை முன்னெடுப்பதில் டோக்கியோ சீமெந்து குழுமம்புகழ்பெற்றுள்ள நிலையில், ஹோர்ட்டன் சமவெளியுடன்நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பதாலும், டயாகமகிழக்கு நடைபாதை நுழைவாயில் பகுதியில் வனஜீவராசிகள்ரேஞ்ஜர் அலுவலகமொன்றை நிறுவுவதில் கைகோர்க்குமாறுடோக்கியோ சீமெந்து குழுமத்துக்கு வனஜீவராசிகள் திணைக்களம்அழைப்புவிடுத்திருந்தது.

டோக்கியோ சீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷகப்ரால் பிசி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர்.ஞானம்ஆகியோர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக தொகுதியை, வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்(திருமதி) பவித்ரா வன்னியாரச்சி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டாரஆகியோரிடம் கையளித்திருந்தனர்.

வனஜீவராசிகள் மற்றும் வனாந்தர வளங்கள் பாதுகாப்பு அமைச்சர்(திருமதி) பவித்ரா வன்னியாரச்சியின் முயற்சிகளை டோக்கியோசீமெந்து குழுமத்தின் தவிசாளர் கலாநிதி. ஹர்ஷ கப்ரால் பிசிபாராட்டி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த டயாகம விருந்தினர்நுழைவாயில் பகுதி, மலைஏறலில் முற்றிலும் காட்சியம்சங்களைகண்டுகளிக்க எதிர்பார்ப்போருக்கு சிறந்த விருந்தாகஅமைந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது. சூழல்சார்நிலைபேறாண்மை என்பதற்கான டோக்கியோ சீமெந்து குழுமத்தின்அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. சகலவிதமான வாகன உட்பிரவேசங்களுக்கும், அனுமதியில்லாதஉட்பிரவேசங்களையும் தடை செய்துள்ளதுடன், தற்காலத்துக்குமாத்திரமன்றி, எதிர்கால தலைமுறைகளுக்காகவும் இந்தபிரத்தியேகமான தாவர மற்றும் விலங்கினங்களை பாதுகாப்பதைஉறுதி செய்யும்.” என்றார்.

புதிய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துக்கானஅலுவலகம் நிறுவியமைக்கு மேலதிகமாக, இந்த மலையேறல்பகுதியில் நடைபாதைப் பகுதியில் முக்கியமான இடங்களில்அறிவித்தல் பதாதைகளையும் நிறுவியுள்ளது. இதனூடாகஹோர்ட்டன் சமவெளி பகுதியில் இனங்காணப்படும்பிரத்தியேகமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் பற்றியதகவல்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. Parrotfish Collective இனால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தகவல்பதாதைகள், பூங்காவின் செழுமையான உயிரியல் பரம்பல் பற்றியவிழிப்புணர்வை வழங்குவதாக அமைந்திருப்பதுடன், அதனைபாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை விருந்தினர்களுக்குஉணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. டோக்கியோ சீமெந்துகுழுமத்தின் தூர நோக்குடைய இந்த இயற்கை பாதுகாப்புதிட்டத்தினூடாக ஹோர்ட்டன் சமவெளி பகுதிக்கு விஜயம் செய்யும்விருந்தினர்களுக்கு ஒப்பற்ற அனுபவத்தை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT