Home » யாழ். கோப்பாயில் மோதல்; பெண்கள் உட்பட 23 பேருக்கு விளக்கமறியல்

யாழ். கோப்பாயில் மோதல்; பெண்கள் உட்பட 23 பேருக்கு விளக்கமறியல்

- பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் சேதம்

by Prashahini
November 9, 2023 9:26 am 0 comment

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த இரண்டு நாள்களாக நீடித்த மோதல் நிலையைக் கட்டுப்படுத்த கைது செய்யப்பட்ட 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நேற்று (08) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கோப்பாய் மத்தி கிராமத்தில் இரண்டு தரப்புகளுக்கு இடையே கடந்த சில தினங்களாக நீடித்து வந்த முரண்பாடு திங்கட்கிழமை (06) இரவு மற்றும் செவ்வாய்கிழமை (07) ஆகிய இரு நாட்களில் மோதலாக மாறியது.

இந்த மோதலினால் பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்த போது, இரண்டு தரப்பிலுமாக 3 பெண்கள் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர்.

நபர்களைத் தாக்கியமை, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் 23 பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முதல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நேற்று (08) முற்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, 23 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT