காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் அண்மையில் திறந்து வைக்கப்பட்டன. குவைத் நாட்டின் நிதியுதவியுடன் இலங்கையிலுள்ள ஐ.எஸ்.ஆர்.சி. நிறுவனத்தினால் இக்கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் ஐ.எல்.எம்.றுபைத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் திருமதி ரிஸ்வானி ரிபாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர், ஐ.எஸ்.ஆர்.சி. நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நழீமி, காத்தான்குடி நகரசபை முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி ஜாமியதிதுல் பலாஹ் அரபுக்கல்லூரி அதிபர் மற்றும் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிருவாகிகள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இக்கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன், இங்குள்ள மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் காத்தான்குடி முஸ்லிம் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் தலைவர் ஐ.எல்.எம்.றுபைத் அவர்களிடம் ஐ.எஸ்.ஆர்.சி. நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட இணைப்பாளர் ஏ.எல்.ஜுனைட் நழீமி அவர்களினால் கையளிக்கப்பட்டன.
எம்.எஸ்.எம். நூர்தீன்
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)