ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்ல பலஸ்தீன போராட்ட அமைப்புகளான ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.
ஹமாஸ் பிரதித் தலைவர் சாலிஹ் அல் அரூரி மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் தலைவர் சியாத் அல் நகாலாவை சந்தித்த நஸ்ரல்லா, காசாவில் போராட்டத்திற்கான உண்மையான வெற்றி ஒன்றை அடைவதற்கு தமது கூட்டணி மேற்கொள்ள வேண்டி நடவடிக்கையை மதிப்பீடு செய்ததாக ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான அல் மனார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
“இந்தக் கூட்டத்தில் சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் மற்றும் எதிர்ப்பு கூட்டணி என்ன செய்ய வேண்டும் என்பதை மதிப்பீடு செய்தது” என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஈரான், சிரியா, பலஸ்தீன போராட்டக் குழுக்கள், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் மற்றத் தரப்புகளையே கூட்டணி என குறிப்பிடப்பட்டுள்ளது.