ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகும் தளபதி 68 திரைப்படத்தின் பூஜை வீடியோ இன்று (24) நண்பகல் 12.05க்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
பிகில் படத்திற்கு பின் விஜய்யுடன் ஏ.ஜி.எஸ் நிறுவனம் இரண்டாவது முறையாக இப்படத்தில் கைகோர்த்துள்ளது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மைக் மோகன், பிரபு தேவா, பிரஷாந்த், சினேகா, லைலா, ஜெயராம், யோகி பாபு, மீனாக்ஷி சவுத்ரி, அஜ்மல், வைபவ், விடிவி கணேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் பூஜை வீடியோ லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் வெளிவரும் என தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது.
தளபதி 68 படத்தில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல் விஜயதசமியான இன்று (24) நண்பகல் 12.05க்கு வெளியாகும் என தகவல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இன்று தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ மற்றும் படத்தின் நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருக்கிறார். அதன்படி, இன்று தளபதி 68 படத்தின் பூஜை வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.
தளபதி 68 படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு விஜய்க்கு நடிகை ஜோதிகாவும் இன்னொரு விஜய்க்கு நடிகை ப்ரியங்கா மோகனும் ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், ஜோதிகா நடிக்க திட்டமிட்ட கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக சிம்ரனின் அல்லது சினேஹா அல்லது லைலா நடிப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கொலை படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சௌத்ரி விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் எனவும் தகவல் பரவியது.
லியோ படத்தின் மூலமாக அனைவரும் பேசக்கூடிய தலைப்பாக LCU ட்ரெண்டானது. அதனை தொடர்ந்து தளபதி 68 வெங்கட் பிரபு சினிமாட்டிக் யூனிவெர்ஸா என கிண்டலாக கேள்விகேட்டு பதிவிட்டிருக்கிறார் அர்ச்சனா. அதற்கு பதிலளிக்கும் விதமாக நகைச்சுவை நடிகர் செந்திலின் ஒரு எக்ஸ்ப்ரஷன் விடியோவை பதிவிட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. இந்த பதிவுக்கு ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே தளபதி 68 குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் தளபதி 68 பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரின் தொடர் பதிவுகள் தளபதி 68 படத்தில் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.