Wednesday, February 21, 2024
Home » கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 15 மணித்தியால நீர் வெட்டு

- இன்று பி.ப. 5.00 முதல் நாளை மு.ப. 8.00 வரை அமுல்

by Rizwan Segu Mohideen
October 21, 2023 3:41 pm 0 comment

கொழும்பின் சில பகுதிகளில் இன்று (21) பி.ப. 5.00 மணி முதல் 15 மணித்தியால நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, கொழும்பு 11, 12, 13, 14, 15 ஆகிய பிரதேசங்களில் இன்று (21) சனிக்கிழமை பி.ப. 5.00 மணி முதல் நாளை (22) ஞாயிற்றுக்கிழமை மு.ப. 8.00 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என சபை குறிப்பிட்டுள்ளது.

அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவிததுள்ள சபை, போதியளவான நீரை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

கொழும்பு 01 – 15 பெயர்கள் (Colombo 01 – 15 Names)

  • கொழும்பு 1 – கோட்டை
  • கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
  • கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
  • கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
  • கொழும்பு 5 – ஹெவ்லக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
  • கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
  • கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
  • கொழும்பு 8 – பொரளை
  • கொழும்பு 9 – தெமட்டகொட
  • கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
  • கொழும்பு 11 – புறக்கோட்டை
  • கொழும்பு 12 – புதுக்கடை, வாழைத்தோட்டம்
  • கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
  • கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
  • கொழும்பு 15 – மோதறை/முகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT