மொனராகலை மாவட்டத்தின் விவசாயிகளின் நலன் கருதி ரூபா 258 மில்லியன் செலவில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் இம் மாவட்டத்தில் வாழும் சேனை மற்றும் இதர பயிரினங்களை பயிரிடும் விவசாயிகளின் விளை பொருட்களை இலகுவில் ஒரே கூரையின் கீழ் சந்தைப்படுத்துவதற்கான சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக வாராந்த சந்தை அமைக்கப்பட்டுள்ளது.
இச்சந்தை ஊவா மாகாண பிரதேச அபிவிருத்தி உதவித் திட்டத்தின் மூலம் 177 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெல்லவாய வாராந்த சந்தை மற்றும் வாகனத் தரிப்பிடம் 45 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
சியம்பலாண்டுவ தொம்மகஹவல வாராந்த சந்தை மற்றும் 40 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மடுல்ல மாரி அராவ வாராந்த சந்தை போன்றவை விவசாய ராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்க்ஷ மற்றும் உயர் அதிகாரிகளினால் கடந்த சனிக் கிழமை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
(ஊவா சுழற்சி நிருபர்)