நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும் பதுளை மாவட்டத்திலும் மாலையில் அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன், பலத்த மின்னல் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகளவில் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்பு இன்று (09) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அபபகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.