யாழ். வலிகாமம் வலயக் கல்விப்பணிப்பாளரின் கோரிக்கைக்கு அமைவாக அனைத்துலக மருத்துவநல அமைப்பு(IMHO-USA) மற்றும் இரட்ணம் பவுண்டேசன்(Ratnam Foundation-UK) அமைப்புகளினால் முதலாம் கட்டமாக பன்னிரண்டு பாடசாலைகளிலும், இரண்டாம் கட்டமாக ஒன்பது பாடசாலைகளிலும் திறன்பலகையுடனான திறன்வகுப்பறைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.
இவற்றில் இரண்டாம் கட்டத்தில் வழங்கப்பட்ட ஒன்பது பாடசாலைகளில் ஒன்றான பெரியவிளான் றோ.க.த.பாடசாலையில் திறன்வகுப்பறையை திறந்து வைக்கும் நிகழ்வு சென்ற வாரம் மிகச்சிறப்பாக நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் திறன்பலகை தொடர்பாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களினால் , மாணவர்களுடனான பங்குபற்றுதலுடன் வகுப்பறைச் செயற்பாடுகள் மிகவினைத்திறனான முறையில் நிகழ்த்திக் காட்டப்பட்டிருந்தன.
e class, white board, g compries மென்பொருட்களுடன் e thksalawa, NIE, DP போன்ற வலய அமைப்புக்களை பயன்படுத்தியது மட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பயிற்சியின்போது வழங்கப்பட நுட்ப விடயங்களையும் தமது வகுப்பறைச் செயற்பாடுகளில் மேற்படி ஆசிரியர்கள் இணைத்திருப்பது இப்பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
இந்த ஆரம்ப நிகழ்வுகளில் வலயபிரதிநிதிகளுடன், பழைய மாணவர்கள்,பெற்றோர் கலந்து கொண்டதுடன், IMHO-USA அமைப்பின் வதிவிடப் பணிப்பாளர் சு. கிருஷ்ணகுமார் அவர்களும் கலந்து கொண்டு ஆசிரியர்களை நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.