Wednesday, July 17, 2024
Home » கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட 3 பெட்டிகளில் 17 கி.கி, குஷ், ஐஸ் போதைப்பொருட்கள்

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட 3 பெட்டிகளில் 17 கி.கி, குஷ், ஐஸ் போதைப்பொருட்கள்

- தெரு மதிப்பு ரூ. 12.2 கோடி என மதிப்பீடு

by Rizwan Segu Mohideen
October 7, 2023 11:41 am 0 comment

– பெட்டியின் அடியில் சூட்சுமமாக தயாரித்த அடிச்சட்டத்திலிருந்து மீட்பு

கனடாவில் இருந்து கொழும்பு பிரதேசத்தில் உள்ள நபரொருவருக்கு அனுப்பப்பட்ட 3 மரப்பெட்டிகளில் 16 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருளும், 1 கிலோ ஐஸ் வகை போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.

சூட்சுமமாக அமைக்கப்பட்ட போலி அடிச் சட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டதாக, சுங்கத் திணைக்கள ஊடகப் பேச்சாளரும் சுங்கத் திணைக்கள பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.

பேலியகொடயில் உள்ள பொதிகளை சோதித்து வெளியேற்றும் தொகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த போதைப்பொருட்களின் தெரு மதிப்பு ரூ. 122 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT