விண்வெளியில் மிக அதிக நாட்கள் இருந்த அமெரிக்க விண்வெளி வீரர் பூமிக்குத் திரும்பியுள்ளார்.
பிரெங்க் ருபியோவும் 2 ரஷ்ய வீரர்களும் கடந்த ஆண்டு செப்டம்பரில் விண்வெளிக்குச் சென்றனர்.
அவர்கள் 6 மாதங்களுக்கு முன் திரும்பவிருந்தனர். விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணம் தடைப்பட்டது. அவர்கள் புதிய விண்கலம் அனுப்பப்படும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. இதனால் அவர்கள் 371 நாட்கள் விண்வெளியில் இருந்தனர். ருபியோ விண்வெளியில் மிக நீண்ட காலம் இருந்த அமெரிக்க வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
எனினும் விண்வெளியில் அதிக காலம் இருந்தவர் என்ற சாதனையை ரஷ்யாவின் வெலெரி பொல்யாகோவ் வசமுள்ள. பொல்யாகொவ் 1994 ஜூனவரிக்கும் 1995 மார்ச் மாதத்திற்கு இடையே 437 நாட்கள் விண்வெளியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.