எதிர்வரும் ஒக்டோபர் 01ஆம் திகதி கொண்டாடப்படும் உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தையிட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை பார்வையிடுவது இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மிருகக் காட்சிசாலைத் திணைக்களம் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறித்த தினத்தில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதோடு, சிறுவர்களுக்காக பல விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ஒக்டோபர் 01 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, தேசிய மிருகக்காட்சிசாலையை பார்வையிட வரும் சிறுவர்கள் கலந்து கொண்டு சர்வதேச சிறுவர்தினத்தை கொண்டாடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உலக சிறுவர்கள் தின கொண்டாட்டங்கள் மு.ப. 8.30 – பி.ப. 5.00 மணி வரை தெஹிவளை மிருகக் காட்சிசாலை வளாகத்தில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களின் கல்வி அறிவை மேம்படுத்துதல், சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான அணுகுமுறைகளை மேம்படுத்துதல், சிறுவர்களின் திறன்களை மேம்படுத்துதல், பொழுதுபோக்கை வழங்குதல் போன்ற பல நோக்கங்களுடன் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 01 ஆம் திகதி உலக சிறுவர் மற்றும் முதியோர் தினத்தை கொண்டாடும் வகையில் இவ்வாறான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அமைய இவ்வருடமும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.