Home » 50 எரிபொருள் நிலையங்களை மேலதிகமாக வழங்க அனுமதி

50 எரிபொருள் நிலையங்களை மேலதிகமாக வழங்க அனுமதி

சினோபெக் நிறுவனத்துக்கு

by gayan
September 28, 2023 2:02 pm 0 comment

சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு நாட்டில் மேலும் ஐம்பது எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மின் சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சினோபெக் நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை வழங்கியுள்ளது. அவற்றில் 145 எரிபொருள் நிலையங்களை பொறுப்பேற்பதற்கு அந்த நிறுவனம் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளது.

தற்போது மேலும் 50 எரிபொருள் நிலையங்கள் அமைப்பதற்காக அந நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த எரிபொருள் நிலையங்களில் எண்ணிக்கையை 200 ஆக மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லையென குறிப்பிட்டுள்ள அவர், அது தொடர்பில் ஆட்சேபனைகளிருந்தால், வழங்குநர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுடனான ஒப்பந்தங்களை பரிசீலிக்கத் தயாராக உள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x