626
இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவரை நியமிக்கும் போது இலங்கை போக்குவரத்து சபையின் 39 டிப்போக்களில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கும் போதிய வருமானம் இருக்கவில்லை. தற்போது 09 டிப்போக்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்க முடியாதுள்ளது. ஏனைய டிப்போக்கள் போதுமான வருமானத்தை பெறுகின்றன என போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.
அவர்அண்மையில் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சில் நடைபெற்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக சாரதிகளையும் நடத்துனர்களையும் நியமிப்பதற்கான நியமன கடிதத்தை வழங்கும் போதே இதனை தெரிவித்தார்.