அகில இலங்கை ரீதியில் அநுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற பத்து ஓவர் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தேசிய சாம்பியனாக வெற்றி வாகை சூடிய அக்கரைப்பற்று அஸ்-சிராஜ் மகா வித்தியாலய கிரிக்கெட் அணியினரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, அவ்வித்தியாலயத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.
கல்லூரி அதிபர் எ.ஜி.பஸ்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, இம்மாணவர்களை பயிற்றுவித்த பயிற்றுநர்களான முஸ்னிக் அஹமத், எம்.ஐ.மிப்ரான் ஆகியோரும் பண வவுச்சர் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கலாநிதி எம்.ஐ எம்.சித்தீக் அஸ் ஹாரி தலைமையிலான பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
அட்டாளைச்சேனை குறூப் நிருபர்