545
நெஸ்டமோல்ட் சைக்கிளின் சலேஞ்ச் சைக்கிள் பந்தயத்தின் உயர்நிலை பெண்கள் பிரிவில் எம். பெர்னாண்டோ வெற்றியீட்டினார். கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகில் இருந்து கடந்த ஞாயிறன்று (24) நடைபெற்ற இந்தப் போட்டியில் 24 கிலோமீற்றர்கள் தூரம் கொண்ட உயர்நிலை பெண்கள் பிரிவு போட்டியில் எம்.
பெர்னாண்டோ 54.12 நிமிடங்களில் போட்டித் தூரத்தை முடித்து வெற்றியீட்டினார். இவர் இலங்கை இராணுவம் சார்பிலேயே போட்டியில் பங்கேற்றிருந்தார். இதில் எஸ். பிரியதர்ஷினி இரண்டாம் இடத்தையும் சந்தமினி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
இந்தப் போட்டிகளுக்கு நெஸ்லே நெஸ்டமோல்ட் பூரண அனுசரணை வழங்கியது.