Home » இஸ்லாமிய தினப்போட்டியில் கொழும்பு பாத்திமா சாம்பியன்

இஸ்லாமிய தினப்போட்டியில் கொழும்பு பாத்திமா சாம்பியன்

by sachintha
September 27, 2023 8:06 am 0 comment

2023ஆம் வருடத்திற்கான பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற இஸ்லாமிய தினப்போட்டிகளில் பல போட்டிகளில் வெற்றிபெற்று கொழும்பு, பாத்திமா முஸ்லிம் பெண்கள் கல்லூரி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.

கொழும்பு வெஸ்லி கல்லூரியினால் நடாத்தப்பட்ட 51ஆவது வருடாந்த பாடசாலைகளுக்கிடையிலான இஸ்லாமிய தினப் போட்டிகளிலே கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி ஒட்டு மொத்த சம்பியனாகியுள்ளது.

போட்டிகள் கடந்த 13ஆம் திகதி வெஸ்லி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் 18 பாடசாலைகள் பங்குபற்றியதுடன் 400ற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிட்டு அதிகூடிய புள்ளிகளை (நான்கு முதலாம் இடங்கள், மூன்று 2ம் இடங்கள் மற்றும் நான்கு 3ம் இடங்கள்) பெற்றதன் மூலம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்று முதன்முறையாக சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT