NETAFIM நிறுவனத்துடன் AgStar புதிதாக செய்துகொண்ட ஒப்பந்தமானது பயிச்செய்கையாளர்கள், சிறு விவசாயிகள் மற்றும் உள்ளூர் தோட்டச்செய்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டாண்மையாகும்.
AgStar என்பது இலங்கையின் முன்னணி உரம், பயிர் பராமரிப்பு, விதைகள் மற்றும் விவசாய தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு நிறுவனமாகும். ஒரு முன்னோடியான விவசாய உள்ளீட்டு விநியோகஸ்தர் என்ற முறையில் இப்போது உலகின் மிகப்பெரிய நீர்ப்பாசன தீர்வுகளுக்கான சூத்திரங்களைக் கொண்ட முன்னோடிகளான NETAFIM இஸ்ராயேல் நிறுவனத்துடன் கூட்டிணைந்துள்ளது.
NETAFIM நிறுவனமானது உலகளாவிய உணவுப் பற்றாக்குறையை தீர்ப்பது போன்ற சவால்களுக்கு முகம் கொடுக்கும் Orbia அமைப்பின் பங்குதாரராகும். இவர்களுடைய நீர்ப்பாசன உபகரணங்கள் Drippers, Dripper-Lines, Sprinklers and Micro-Emitters போன்றவற்றுக்கு மிகவும் அனுசரணையாக இருக்கின்றது.
உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளுடன் தொடர்புடைய இந்நிறுவனமானது 200 ஹெக்டெயர் தொடங்கி 0.2 ஹெக்டெயர் வரையிலான விவசாய நிலத்தினைக் கொண்ட விவசாயிகளுக்கான நீர்ப்பாசன தீர்வுகளை வழங்கியுள்ளது.
பயிர்வகை, தட்பவெப்பம், மண்வகை எதுவாக இருந்தாலும் சரியான அளவு நீர் மற்றும் ஊட்டச் சத்துக்களை ஏற்ற நேரத்தில், ஏற்ற அளவுகளில் பயிர்களுக்கு வழங்குவதன் மூலம் பயிர்கள் உகந்த விதத்தில் வளரும். இதுவே விவசாயத்திற்கான தனித்துவமான மற்றும் நிலையான அணுகுமுறையாகும்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்நிறுவனமானது இலங்கையின் வேளாண்மை மற்றும் பயிற்சிக்காக அதிகளவில் முதலீடு செய்துள்ளது.
NETAFIM நிறுவனத்தின் செயற்பாடுகளானது சிறு மற்றும் குறும் விவசாயிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் மலிவு விலையிலான பலவகையான தயாரிப்புக்களை அறிமுகப்படுத்த உதவியுள்ளது. NETAFIMநிறுவனம் குடுநுஓNநுவு உள்ளிட்ட நீர்ப்பாசன உபகரண தயாரிப்புக்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட காப்புரிமைகளைப் பெற்றுள்ள காரணத்தினால் விவசாயிகளுக்கு தரம் மற்றும் மலிவு விலையை உறுதி செய்கின்றது.
இந்நிறுவனத் தயாரிப்பான FLEXNET PIPES தற்போது நீர்க்கசிவு, நீர்வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமைவதோடு உலக சந்தையில் தனக்கென முன்னணி இடத்தை தக்கவைத்துள்ளதுடன், மலிவு விலை, நம்பகத்தன்மை மற்றும் விற்பனைக்குப் பிந்திய சேவையையும் உறுதி செய்கின்றது.