Home » உறவினர்களுடன் இணைவதற்காக படகு மூலம் தனுஷ்கோடி சென்ற இருவர் இராமேஸ்வரத்தில் கைது

உறவினர்களுடன் இணைவதற்காக படகு மூலம் தனுஷ்கோடி சென்ற இருவர் இராமேஸ்வரத்தில் கைது

by sachintha
September 27, 2023 8:02 am 0 comment

தமிழக அகதி முகாமில் தங்கியுள்ள மகன், மகள், உள்ளிட்ட உறவினர்களுடன் இணையும் நோக்குடன்,படகில் தனுஷ்கோடி சென்ற இருவர் கைதாகியுள்ளனர். வுனியா தலைமன்னார் பகுதியைச் சோ்ந்த பெண்ணும், ஆணுமே

கைதாகியுள்ளனர்.தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த இவ்விருவரையும் தமிழக கடலோரப் பாதுகாப்பு பொலிஸார் அழைத்துச் சென்று (25) விசாரணை செய்து மண்டபம் முகாமில் தங்க வைத்தனர்.

வவுனியா பகுதியைச் சேர்ந்த ரபியத்துல் அலவியா (வயது 62) என்ற பெண்ணும், தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த நேசபெருமாள் (64) என்ற இருவருமே தஞ்சடைந்துள்ளனர்.

இதில், ரபியத்துல் அலவியாவின் மகள், மகன் உள்ளிட்டோர் தமிழகத்திலுள்ள அகதிகள் முகாமில் தங்கி இருப்பதாகவும், வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு இலங்கை வந்த அவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதற்காக இலங்கையிலிருந்து படகோட்டிக்கு ரூ.50 ஆயிரம் கொடுத்து தனுஷ்கோடிக்கு சென்றதும் தெரியவந்தது.

விசாரணையின் பின்னர், இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் இவர்களை ஒப்படைத்ததாக பொலிஸார் தெரிவித்தனா்.

இதேபோல், நேசபெருமாளும் மன்னார் பகுதியை சேர்ந்தவரெனவும் இவரது குடும்பத்தினர் மண்டபம் அகதிகள் முகாமிலிருப்பதால் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக இங்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்குப் பின்னர் 02 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT