390
ஆறு வயது சிறுமியும் உள்ளடக்கம்; பொலிஸ் தலைமையகம் தெரிவிப்பு
இவ்வருடத்தின் (2023) இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 77 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 06 வயது சிறுமி உட்பட 46 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள பொலிஸ் தலைமையகம்,தென் மாகாணத்திலேயே அதிகளவான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இச்சம்பவங்களில் 35 பேர் காயமடைந்து பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்தது.
லோரன்ஸ் செல்வநாயகம்