ஒவ்வொரு வருடமும் டிமென்ஷியா அல்லது முதுமையில் மறதிநோய் தொடர்பில் 10 மில்லியன் புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். உலகளாவிய ரீதியில் 55 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு டிமென்ஷியா காணப்படுவதுடன், இவர்களில் 60 வீதத்துக்கும் அதிகமானவர்கள் குறைந்த மற்றும் மத்திய வருமானம் ஈட்டும் நாடுகளில் வாழ்கின்றனர் என உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிடுகிறது.
உயிரிழப்புக்கள் ஏற்படுத்தும் முன்னணிக் காரணிகளில் ஏழாவது காரணியாக டிமென்ஷியா காணப்படுவதுடன், உலகளாவிய ரீதியில் உள்ள முதுமையானவர்கள் மத்தியில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் அங்கவீனம் மற்றும் தங்கியிருத்தல் நிலைமைகளுக்கும் இதுவும் ஒரு முக்கிய காரணியாக விளங்குகிறது.
அல்சைமர் நோய் என்பது பொதுவான வடிவம் என்பதுடன், நோயாளர்களில் 60-70% ற்கு இது பங்களிக்கின்றது. அல்சைமர் டிமென்ஷியா 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுவதுடன், இந்த நோயின் அளவு ஒவ்வொரு 5 வருடத்துக்கு ஒரு தடவையும் இரட்டிப்பாகிறது.
பக்கவாதத்தின் பின்னர் அல்லது எச்.ஐ.வி போன்ற குறிப்பிட்ட தொற்றுச் சூழ்நிலையின் போது, மோசமான மதுபானப் பாவனையின் விளைவாக, மூளையில் மீண்டும் மீண்டும் ஏற்படும் பௌதீக ரீதியான காயங்களால் டிமென்ஷியா ஏற்படலாம். பல்வேறு வடிவங்களிலான டிமென்ஷியா நோய்களுக்கு இடையிலான எல்லைகள் தெளிவற்றவை என்பதுடன் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் காணப்படுகின்றன.
டிமென்ஷியாவின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் என்பன அண்மைய நிகழ்வுகள் அல்லது விடயங்களை மறத்தல், பொருட்களைத் தொலைத்தல் அல்லது காணாமல் செய்தல், நடக்கும்போது அல்லது வாகனங்களைச் செலுத்தும்போது தொலைந்துபோதல், பரிச்சயமான முகங்களில் கூட குழப்பம் ஏற்படல், நேரத்தை இழத்தல், பிரச்சினைகளைத் தீர்த்தல் அல்லது தீர்மானங்களை எடுப்பதில் சிரமங்களை எதிர்கொள்ளல், உரையாடல்களைத் தொடர்ந்து சிக்கல்கள் அல்லது வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் மற்றும் வழக்கமான பணிகளைச் செய்வதில் சிரமங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும்.