Home » நைகரில் இருந்து பிரான்ஸ் தூதுவர், படைகள் வாபஸ்

நைகரில் இருந்து பிரான்ஸ் தூதுவர், படைகள் வாபஸ்

by gayan
September 26, 2023 10:42 am 0 comment

நைகரில் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சியை அடுத்து அந்த நாட்டுடனான அனைத்து இராணுவ ஒத்துழைப்புகளையும் முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் அந்நாட்டுக்கான தூதுவரை திரும்பப் பெறுவதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவே மக்ரோன் அறிவித்துள்ளார்.

கடந்த ஜூலையில் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய நைகரின் இராணுவ அரசு இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளது.

“நைகரின் இறைமையை நோக்கிய புதிய படியை கொண்டாடுகிறோம்” என்று அது வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலத்தால் சூழப்பட்ட இந்த மேற்கு ஆபிரிக்க நாட்டில் சுமார் 1500 பிரான்ஸ் துருப்புகள் நிலைகொண்டுள்ளன.

பிரான்ஸின் பிரசன்னத்திற்கு எதிராக கடந்த சில மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நீடித்ததோடு தலைநகர் நியாமியில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் நீடித்து வந்த நிலையிலேயே பிரான்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் அண்மையில் இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்ற பல முன்னாள் பிரான்ஸ் காலனி நாடுகளில் ஒன்றாக நைகர் உள்ளது. முன்னதாக புர்கினா பாசோ, கினியா, மாலி மற்றும் சாட் நாடுகளிலும் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியதோடு இதன் தொடர்ச்சியாக கபோனில் கடந்த மாதம் இராணுவ சதிப்புரட்சி வெடித்தது.

இதில் மாலி மற்றும் புர்கினா பாசோ நாடுகளும் அங்குள்ள பிரான்ஸ் இராணுவத்தை வெளியேறும்படி கோட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பிராந்தியத்தில் பிரான்ஸ் நவ காலனித்துவ கொள்கையை பின்பற்றுவதாக அண்மைய ஆண்டுகளில் பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை பிரான்ஸ் மறுத்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT