சீனக் கடலோரக் காவல்படை சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் மிதக்கும் அரணை அமைத்துவருவதாக பிலிப்பைன்ஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்கள் ஸ்கார்போரோ ஷோல் பகுதிக்கு அருகே செல்லவும் மீன் பிடிக்கவும் மிதக்கும் அரண் தடையாய் இருப்பதாக பிலிப்பைன்ஸ் கூறியது. சீனாவின் நடவடிக்கை, மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக அது குறிப்பிட்டது.
தென் சீனக் கடலின் 90 வீதமான பகுதிக்கு பிலிப்பைன்ஸ் உரிமை கொண்டாடுவதோடு 2012 இல் அது ஷோல் பகுதியை கைப்பற்றியது.
ரோந்துப் படகு ஒன்றினால் கடந்த வெள்ளிக்கிழமை (22) இந்த மிதக்கும் அரண் கண்டுபிடிக்கப்பட்டதாக பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையின் கொமடோர் ஜே டரிலா தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் படகு அங்கு சென்றபோது மூன்று சீன கடலோரக் காவல் படகுகள் மற்றும் சீன கடல்சார் இராணுவ சேவை படகு ஒன்று இந்த தடுப்பை நிறுவியதாக அவர் மேலும் தெரிவித்தார்.