தீயவைகளை சகித்துக் கொள்வதாலும், அதனை தடுக்காமல இருப்பதாலும் கண்டும் காணாமல் இருப்பதாலும் தீயவைகள் பெருகும். இவைகளால்தான் துஷ்டத்தனம் தூண்டப்படுகிறது. சுயநலம், குறுகிய மனப்பான்மை கோழைத்தனம் ஆகியவை அநீதியை உருவாக்குகின்றன. சாதாரண விஷயமாகத் தோன்றும் இவை தான் அநீதியின் தாயாகும். கொலை, கொள்ளை, பலாத்காரம் ஆகியவை சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குரிய குற்றங்களாகும். அதே போல் சுயநலம் குறுகிய மனப்பான்மை. சமுதாய பொறுப்புகளைத் தட்டிக் கழித்தல் போன்றவை தெய்வத்தின், ஆன்மீகத்தின் சட்டப்படி பெரும் பயங்கர பாவமாகும்.
மக்களின் இவ்வித மனப் போக்கின் காரணமாகத் தான் தனி மனிதனும், சமுதாயமும் வீழ்ச்சியடைக்கின்றன. இதன் தீய விளைவுகளை நாம் அனைவரும் அனுபவிக்க நேரிடுகிறது. கடந்த காலங்களில் இவை தான் நடந்து வந்துள்ளன. அவரவர்கள் தந்த மது குடில்களில் அமர்ந்து கொண்டு காலம் கழித்து வந்தனர். துஷ்டர்கள் எதிர்த்து சிறிதும் பெரிதுமான கட்டுப்பாடுகளை விதித்து தடை செய்யாமையால் இந்நிலை வந்துள்ளது. கடினமான இத்தருணத்தில் நமக்கு பெரும் பொறுப்பு உள்ளது என்பதை அறிந்து செயல் புரிவோம்.
எலும்பும் தோலும் கொண்ட பொம்மை போன்று பலவீன உடலுடன் வாழ்வது இழிவான வாழ்க்கையாகும். சாதாரண உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் போல தோல் போர்த்திய பிணங்களைப் போல வாழ்வது இழிவான வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ்வதால் வாழ்வின் நோக்கம் நிறைவேறாது.
சிந்திக்கும் ஆற்றல் தான் மற்ற உயிரினங்களிலிருந்து மனிதனை சிறப்பித்துக் காட்டுகிறது. அதனால் தான் அவன் வசதி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்கிறான். இதுவே சிந்தனையின் முதல் வெளிப்பாடு எப்போது எண்ணங்கள் சக்தி வாய்த்தாக வாழ்க்கையின் குறிக்கோளாக அதன் வடிவமாக அவைகளை பயன்படுத்தும் புரிதலாக உருவாகிறதோ அது சிந்தனையின் அடுத்த வெளிப்பாடு ஆகும். இந்த வழியையும், முயற்சியையும் தான் நாம் தத்துவ ஞானம், தத்துவம், ஆன்மீகம் என விளிக்கிறோம்.
கடவுளால் வழங்கப்பட்ட இந்த எண்ண வலிமையை பெரும் லட்சியத்தை அடைவதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்பவனின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறி, அவனுடைய ஒவ்வொரு செயலிலும் உற்சாகம் மிகுந்திருப்பதால் அவன் ஒரு முன்னுதாரணப் புருஷனாக, நிறைந்த வாழ்க்கையை வாழ்கிறான்.