உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் இணைந்து சுற்றுலா வாரத்துக்கான நிகழ்வுகளை திருகோணமலையில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் என்.எம். நெளபிஸ் தெரிவித்தார்.
இந்த நிகழ்வுகள் எதிர்வரும் செப்டெம்பர் 27 ஆம் திகதி தொடக்கம் 01 ஆம் திகதி வரை திருகோணமலை டச்பே கடற்கரையில் இடம்பெறவுள்ளதோடு, இதில் பங்குபற்றுபவர்கள் கிழக்கு மாகாணத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
குறித்த நிகழ்வுகளின் ஓர் அங்கமாக பட்டம் விடுதல், மரதன் ஓட்டம் போன்ற பல போட்டி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாலமுனை விசேட, கல்முனை மத்திய தினகரன் நிருபர்கள்