Tourism and Green Investment எனும் தொனிப்பொருளின் கீழ் கிழக்கு மாாணத்தில் சுற்றுலா பணியகத்தால் இம்மாதம் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் 01ஆம் திகதி வரை கொண்டாடப்பட உள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம், மாகாண விளையாட்டு மற்றும் கலாசார திணைக்களத்துடன் இணைந்து சுற்றுலா பணியகத்தால் சர்வதேச சுற்றுலா தின நிகழ்வுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஒக்டோபர் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ள சுற்றுலா வாரத்தில் பல்வேறு கலாசார மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.
திருகோணமலை டச்பே (DUCHBAY) கடற்கரையில் உணவு திருவிழா(Food Festival), இசை நிகழ்ச்சி,பட்டம் திருவிழா,கடற்கரை கபடி, கடற்கரை காற்பந்து, கடற்கரை கரபந்து, கார்னிவேல் ,மரதன் போன்ற பிரமாண்ட நிகழ்வுகள் இடம்பெறுகின்றதோடு, விசேடமாக சிறுவர் தினத்தன்று சிறுவர்களுக்கான விசேட நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளன.
பல்வேறு நாடுகளில் இருந்து முக்கிய அதிதிகளும் சுற்றுலாப் பயணிகளும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர்.