98
கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்த விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் கல்லூரியின் 80ஆவது குழு கால்பந்து மற்றும் கிரிக்கெட் சம்பியனானதோடு மேசைப் பந்து, பெட்மின்டன் போட்டிகளில் இரண்டாம் இடத்தை வென்றது.
இந்த போட்டிகள் சங்கத்தின் தலைவர் மொஹமட் ஷிராஸ் வழிகாட்டுதலின் கீழ் கல்லூரி மைதானத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
இதில் சங்கத்தின் முன்னாள் தலைவர் நுஹுமான் ஹுசைன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சம்பியனான 80ஆவது குழு முன்னாள் தலைவர் அஸ்லம் தெளபீக் பேராசிரியர் எம்.டி.ஏ. புர்கான் வெற்றி கிண்ணத்தை கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்காரிடம் இருந்து பெற்றார்.
ருஸைக் பாரூக்