இந்திய கடற்படையினர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைப்பு
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த முதலாம் திகதி மீன் பிடிக்கச்சென்று இரண்டு வார காலமாக காணாமல் போயிருந்த மூன்று மீனவர்களையும் இந்திய கடல் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின் அவர்கள் (18) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
வழமைபோன்று மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு சென்ற ஏ.கே.எம். இன்ஜாஸ், எம்.எஸ்.எம். சிராஜூதீன் மற்றும் எம்.எல். நபாஸ் ஆகிய மூவருமே இவ்வாறு காணாமல் போனவர்களாவர்.
இவர்கள் தொழிலுக்குச் சென்று கரைக்கு திரும்பாததினால் பதற்றமடைந்த மீனவர்களும், குடும்பத்தினரும் இலங்கை கடற்படை மற்றும் மீனவர்களின் உதவியோடு சூழவுள்ள கடல் பிரதேசங்களில் பலநாட்களாக படகுகள் மூலம் தேடுதல்களை மேற்கொண்டனர். எவ்வித தகவல்களும் கிடைக்காமையினால் ஊர் மக்கள் கடந்த சில தினங்களாக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மூவரும் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரகோளாறின் காரணமாக படகு கிழக்கு பிரதேசத்திற்கு அடித்துசெல்லப்பட்டு படகில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது இந்திய நாட்டு கப்பலொன்றினால் கடந்த 15 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்டு இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை கடற்படையினர் ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்திய கடல் பாதுகாப்பு படையணி மற்றும் இலங்கை கடற்படையினருக்கு ஊர் மக்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்