இலங்கைக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக வந்துள்ள தென்னிந்திய பிரபல பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று (20) நல்லூர் கந்த சுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபட்டிருந்தார்.
நல்லூருக்கு சென்ற தான் எடுத்த புகைப்படங்களை தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள நிலையில் அவை, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
தென்னிந்திய தமிழ் சினிமாவின் பிரபலங்கள் கடந்த சில மாதங்களாக இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரபுதேவா, சினேகா, ஜனனி, கலாமாஸ்டர், ரக்சிதா என பல்வேறு திரையுலக பிரபல பிரபலங்கள் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
யாழ்.விசேட நிருபர்