Wednesday, October 9, 2024
Home » USA ஜனாதிபதி தேர்தலில் விவேக் ராமசாமி போட்டி

USA ஜனாதிபதி தேர்தலில் விவேக் ராமசாமி போட்டி

-களமிறங்குவதை உறுதிப்படுத்தி பரப்புரை

by sachintha
September 19, 2023 1:11 pm 0 comment

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் H-1B விசா முறை ஒழிக்கப்பட்டு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என இந்திய வம்சாவளி அமெரிக்கரான விவேக் ராமசாமி பரப்புரை செய்துள்ளார். குடியரசுக்கட்சியில் இருந்து வேறு எவரும் தன்னை எதிர்த்து போட்டியிடக்கூடாது என ட்ரம்ப் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர் தனது தேர்தல் பிரசாரத்தில் கலந்துக்கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்தியாவில் மென்பொருள் துறையில் செயல்படும் அனைவரும் பொதுவாக விண்ணப்பிக்கும் இந்த விசாவானது, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்திக்கொள்ள அனுமதிக்கின்றது.

இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் H-1B விசா முறையை நம்பியுள்ளன.

இந்த முறையை ஒழிக்க வேண்டும் என வாதிடும் விவேக் ராமசாமியும், இதுவரை 29 முறை இந்த விசா வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x