லிபியாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் கிரேக்க நாட்டு மீட்புக் குழுவைச் சேர்ந்த மூவம் மற்றும் லிபிய நாட்டு குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர். லிமியாவில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் டெர்னா நகருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) பயணித்துக் கொண்டிருந்த மீட்புக் குழுவினரை ஏற்றிய பஸ் வண்டி, குடும்பம் ஒன்று பயணித்துக் கொண்டிருந்த கார் வண்டி மீதே மோதியுள்ளது.
இதில் காரில் இருந்த மேலும் இருவர் மற்றும் பஸ்ஸில் இருந்த மேலும் எட்டுப் போர் படுகாயத்திற்கு உள்ளாகி இருப்பதாக லிபிய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துக் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களை ஏற்றிய பஸ் வண்டியே விபத்துக்குள்ளானதாக கிரேக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் இத்தாலி உட்பட பல நாடுகளைச் சேர்ந்த குழுக்களும் லிபியாவில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. டெர்னா நகருக்கு மேலால் அமைந்திருக்கும் இரு அணைகள் உடைபெடுத்து ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11,300ஐ எட்டியுள்ளது. எனினும் 10 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் தொடர்ந்து காணாமல்போயுள்ளனர்.