அக்கரைப்பற்று எச்.ஆர்.ஏ. நிறுவனத்தின் ஆதரவில் நடைபெற்ற எச்.ஆர்.ஏ. மென்ஸ் சம்பியன் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பள்ளிக்குடியிருப்பு றஹீமிய்யா விளையாட்டு கழகம் சம்பியனானது. இதில் 32 விளையாட்டு கழகங்கள் பங்கு கொண்டன.
அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு அதாஉல்லா விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற இறுதிப்போட்டியில் அக்கரைப்பற்று ஹிஜ்ரா அணியை றஹீமிய்யா அணி 13 ஓட்டங்களால் வீழ்த்தியது. இதில் றஹீமிய்யா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களை பெற்றநிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹிஜ்ரா அணி 51 ஓட்டங்களை மாத்திரமே குவித்தது. தொடர் நாயகனாக றஹீமிய்யா அணியின் ஹஸ்லி அஹமட் தெரிவு செய்யப்பட்டார்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்