மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 35 ஆவது ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையின் உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம். ஹுமாயூன், உயரம் பாய்தல் போட்டியில் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார். இதேவேளை சாஹிராவின் உடற்கல்வி போதனாசிரியர் எம்.எப்.எம். துபைல் 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார். அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மாஸ்டர் மெய்வல்லுனர் போட்டியில் இந்த இரு சகோதரர்களும் வெற்றியீட்டியே கோலாலம்பூரில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபெற தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளம் தினகரன் நிருபர்