ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் மோசமான தோல்வி விழித்தொழுவதற்காக தருணமாக இருக்கும் என்று இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்துள்ளார்.
“சில நேரம் இது விழித்தொழுவதற்கான தருணமாக இருக்கக் கூடும். நாம் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளுடன் விளையாடுவதற்கு எமது ஆட்டத்தை உச்சத்தில் வைத்திருக்க வேண்டும். உலகக் கிண்ணத்திற்கு செல்லும்போது எம்மை ஊக்கப்படுத்துவதற்கு இதனை நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும்” என்று சில்வர்வுட் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்துக்கூறிய அவர், “உண்மையில் இது ஒரு மோசமான தினம். நாம் உயர் தரமான பந்துவீச்சுக்கு முகம்கொடுத்தோம். நாம் நிறைவு செய்த விதம் வெட்ககரமானது. என்றாலும் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது” என்றார்.