Home » தேயிலை கொழுந்து உற்பத்தி வீழ்ச்சி

தேயிலை கொழுந்து உற்பத்தி வீழ்ச்சி

- சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள் பாதிப்பு

by Prashahini
September 19, 2023 9:13 am 0 comment

சந்தையில் தற்பொழுது விற்பனை செய்யப்படும் தேயிலை உரத்தின் தன்மை குறைந்துள்ளமையால் இரத்தினபுரி மாவட்டத்தில் தேயிலை கொழுந்து உற்பத்தி வீழ்ச்சி அடைந்துள்ளதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சிறு தொழில் தோட்ட உரிமையாளர்களின் பாதுகாப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

தற்பொழுது சந்தையில் விற்பனை செய்யப்படும் தேயிலை உரத்தின் தன்மை முன்பு விற்பனை செய்யப்பட்ட தேயிலை உரத்தினை விட தரத்தில் குறைந்துள்ளதாக சிறுதேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை காரணமாக தேயிலை தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் நலன்புரி சங்கத்தின் தலைவர் எல். கெமிலஸ் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது சந்தையில் உள்ள தேயிலை உரத்தினை பயன்படுத்தினால் இரண்டு வாரங்களுக்கு மட்டும் தேயிலை கொழுந்து அதிகரிப்பு ஏற்படுகின்ற போதிலும் அதன் பின்னர் அந்த நிலைமை வீழ்ச்சியடைவதாகவும், இதற்கு முன் சந்தையில் இருந்த தேயிலை உரத்தினை பாவித்தால் மூன்று மாதங்களுக்கு வரை தேயிலை கொழுந்து அதிகரித்து பலன் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

தேயிலை கொழுந்து விலை அதிகரிப்பினை விட தேயிலை உரத்தின் விலை அதிகளவு உயர்வடைந்துள்ளதால் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தி தொழிலை கைவிட்டு விட தீர்மானித்துள்ளதாகவும், இந்த அளவு பணத்தை தேயிலை உரத்திற்காக பயன்படுத்தி தேயிலை உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் அதில் பலன் இல்லை எனவும் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சங்கத்தின் அமைப்பாளர் தெரிவித்தார்.

பலாங்கொடை தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT