63
அநுராதபுரம் கல்வி அபிவிருத்தி நிலையத்தில் கடந்த 09ஆம் திகதி நடைபெற்ற மாகாண மட்டத்திலான ஆங்கில தினப் போட்டியில் தரம் – 11 இற்குரிய சொற்பொழிவாற்றல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அ/கலாவெவ முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி ஜாபீர் பாத்திமா சம்ரா மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று, இம்மாதம் 30 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற அகில இலங்கை மட்ட போட்டிக்காகதெரிவு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டி நிகழ்வில் பங்குபற்றிய இப்பாடசாலையின் மாணவிகளான ஆர்.எப். ரம்லா, எம்.எப். மர்யம், எம்.ஆர்.இஸட். பதீனா மற்றும் ஏ.எப். சின்பா ஆகியோர் 3ஆம் இடங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கெக்கிராவ குறூப் நிருபர்