Saturday, July 13, 2024
Home » ஹம்பாந்தோட்டை இக்ரா மாணவர்கள் தென் மாகாண போட்டிக்கு தெரிவு

ஹம்பாந்தோட்டை இக்ரா மாணவர்கள் தென் மாகாண போட்டிக்கு தெரிவு

by sachintha
September 19, 2023 7:44 am 0 comment

அகில இலங்கை தமிழ் மொழித்தின, ஹம்பாந்தோட்டை மாவட்ட ஆரம்பப் பிரிவு போட்டிகளில் கலந்துகொண்ட ஹம்பாந்தோட்டை இக்ரா ஆரம்ப வித்தியாலய மாணவர்களில் நால்வர் முதலாம் இடத்தினைப் பெற்று தென் மாகாண போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றள்ளனர்.

இவர்கள் பிரிவு 01. போட்டிகளில் கலந்து கொண்டு ஆக்கம் எழுத்துப் போட்டியில் எம். ஆர். எம். இப்ரா, பாவோதல் போட்டியில் வீ. கம்ஸிதா, பேச்சுப் போட்டியில் எஸ். என்.எம்.எப். நஸ்ஹா மற்றும் கதை கூறல் போட்டியில் எம். என். அம்மார் ஆகிய மாணவர்களே முதலாம் இடங்களைப் பெற்று தென் மாகாண போட்டிக்குத் தகுதிபெற்றள்ளனர்.

இவர்களுடன் வாசிப்புபோட்டியில் கலந்துகொண்ட மாணவி டீ. ஆர். எப். ரம்லா இரண்டாவது இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT