எதிர்க்கட்சித் தலைவரின் “ஸக்வல” பிரபஞ்சம் வேலைத் திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்துக்கான முதலாவது பாடசாலை பஸ் வண்டி
களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) க்கு வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடசாலை அதிபரிடம் பஸ் வண்டியின் ஆவணங்களை வைபவரீதியாக வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி அஜித் பெரேரா, மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினர் இப்திகார் ஜெமீல் , முன்னாள் களுத்துறை நகர பிதா ஆமீர் நஸீர், நகர சபை உறுப்பினர் ஹிசாம் சுஹைல், வலயக் கல்விப் பணிப்பாளர், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)