தலைமன்னாரிலிருந்து கொழும்புக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க தலைமன்னார் இறங்குதுறை ரயில் நிலையத்திலிருந்து அதிகாலை 4.15 மணிக்கு ஆரம்பமாகும் இந்த ரயில் முற்பகல் 10.34 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையுமென ரயில்வே உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
அதேவேளை, பிற்பகல் 3.35 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் இரவு 10.48 மணிக்கு தலைமன்னார் இறங்குதுறை ரயில் நிலையத்தை சென்றடையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். மேற்படி ரயிலில் குளிரூட்டப்பட்ட முதலாம் வகுப்பு பெட்டிகள் இரண்டும் முன்பதிவுசெய்யக்கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இரண்டும் மூன்றாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்