Wednesday, October 9, 2024
Home » மாணவர்களுக்கு உதவிகளை வழங்கும் ‘இணைந்த கரங்கள்’

மாணவர்களுக்கு உதவிகளை வழங்கும் ‘இணைந்த கரங்கள்’

by sachintha
September 19, 2023 7:50 am 0 comment

‘ஏழ்மையை ஒழிப்போம், கல்வியை விதைப்போம்’ என்ற மகுட வாசகத்தின் கீழ், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவச் செல்வங்களது கல்விச்செயற்பாடுகளுக்கு கைகொடுக்கும் திட்டங்களை ‘இணைந்த கரங்கள்’ அமைப்பு செயற்படுத்தி வருகின்றது.

மாணவர்கள் கல்வியை இடைநடுவே கைவிடுகின்ற அவல நிலையை ஒழிப்பதற்கும் ‘இணைந்த கரங்கள்’ அமைப்பு பாடுபட்டு வருகின்றது. நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் செயற்பட்டு வருகின்ற ‘இணைந்த கரங்கள்’ அமைப்பானது, இம்முறை பதுளை மாவட்டம், ஸ்பிரிங்வெளியில் அமைந்துள்ள ஊவா/ பது/மேமலை தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு தனது உதவிக்கரங்களை நீட்டியுள்ளது.

ஏறத்தாழ 150 இற்கும் மேற்பட்ட இம்மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வானது, பாடசாலை அதிபர் எஸ். திருச்செல்வம் தலைமையிலும், இணைந்த கரங்கள் உறுப்பினர்களான சி. காந்தன், எல்.கஜரூபன், எம். ஜெகனாதன், திருமதி எல்.சங்கீதா, திருமதி. ஏ.பங்கயற்செல்வி ஆகியோரது ஒருங்கிணைப்புடனும் அண்மையில் பாடசாலை மண்டபத்தில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டிருந்ததுடன், இம்மகத்தான சேவையை முன்னெடுக்கும் இணைந்த கரங்கள் உறவுகளுக்கு பாடசாலை அதிபரால் நன்றிகளும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x