அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இல்லை; கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன் என அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் நேற்று திடீரென்று அறிவித்தார்.
பேரறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்த விமர்சனம் காரணமாக அ.தி.மு.க_- பா.ஜ.க இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த மோதலின் தொடர்ச்சியாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.முக கூட்டணியில் பா.ஜ.க இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். ஆரம்பத்தில் ஜெயலலிதாவை விமர்சித்து வந்தார் அண்ணமாலை.
பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்ட நிலையில் இப்போது அண்ணாவை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்” என்றார்.
சமீபத்தில் அறிஞர் அண்ணாவைப் பற்றி தவறான கருத்தை அண்ணாமலை வெளிப்படுத்தியதையடுத்து, தமிழக பா.ஜ.கவினர் உச்சக்கட்ட அதிருப்தியில் உள்ளார்கள். அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ தொடங்கி அ.தி.மு.க மூத்த தலைவர்கள் பலரும் அண்ணாமலைக்கு எதிராகவும் பா.ஜ.கவுக்கு எதிராகவும் கடுமையாக செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கருத்தினை வாபஸ் பெறாமல் விளக்கமளிக்கிறேன் என்பதன் பேரில் அண்ணாமலை மீண்டும் சீண்டியிருக்கிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி கோபமடைந்துள்ளார்.
அமித்ஷா_ எடப்பாடி சந்திப்பு அண்மையில் நடந்து கொண்டிருந்த நிலையில், அண்ணாவைப் பற்றி அண்ணாமலை சீண்டிய சம்வத்தை எடப்பாடியின் கவனத்துக்கு ஜெயக்குமார் கொண்டு சென்றுள்ளார்.