Wednesday, September 27, 2023
Home » நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்பு

- 'இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்' வட்டமேசை கலந்துரையாடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்

by Rizwan Segu Mohideen
September 19, 2023 1:14 pm 0 comment

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்ததாக, நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று (18) ஆரம்பமான ‘நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு – 2023’ இல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இணைந்துகொண்டார்.

2030 ஆம் ஆண்டளவில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை அடைவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டது.

இந்நிகழ்வில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதேவேளை, சர்வதேச புரிந்துணர்வுக்கான வர்த்தக கவுன்ஸில் மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த “இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்” என்ற தொனிப்பொருளில் நேற்று (18) நடைபெற்ற வர்த்தக வட்டமேசை கலந்துரையாடலிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டார்.

இலங்கையில் முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் பற்றி ஆராயும் அமெரிக்காவில் உள்ள 40க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தனியார் துறையின் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அரசாங்கத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகளும் இந்த வட்ட மேசை கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT