ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில், சமுர்த்தி தொடர்பிலான முன்மொழிவுகளை வழங்கவுள்ளதாக, ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் இந்த முன்மொழிவுகளில் உள்வாங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்னும், ஒரு வருடத்திற்காவது சமுர்த்தி வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர்,
நிவாரணத் தொகையை அவசரமாக அமுல்படுத்துவதால் சில அநீதிகள் ஏற்படுவதோடு சிலர் அவதியுறுவதாகவும் தெரிவித்தார்.
ரன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.