116
இலங்கை “ரோம்” பிரகடனத்தில் கையெழுத்திடாததால், தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரமுடியாதென, சுமந்திரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இதுவரை காலமும் கூறியது பச்சைப் பொய் என்பதையும் நாங்கள் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கூறியதே சத்தியம் என்பதையும் காலம் நிரூபித்துக் காட்டியுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ சமூக ஊடகத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இனப்படுகொலையிலிருந்து இலங்கை அரசைக் காப்பாற்றுவது யார்? தமிழினத்தைக் காட்டிக்கொடுப்பது யார்? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.