Saturday, December 2, 2023
Home » காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழப்பு

by damith
September 18, 2023 7:20 am 0 comment

ஹதுன்கம மற்றும் மஹாஓயா பிரதேசங்களில் காட்டு யானைகள் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். காட்டு யானை தாக்கியதில் 82 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாக்கினிகல மலை பகுதிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது, இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஹதுன்கம, ஹிம்பிலியாகட பகுதியில் காட்டு யானை தாக்கி 53 வயதுடைய மற்றுமொரு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அருகில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டுச் சென்ற அவர்,

வீடு திரும்பாத நிலையில் பிரதேசவாசிகள் மற்றும் வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போதே, அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT