Wednesday, September 27, 2023
Home » சனல் 4 க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

சனல் 4 க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

பல வழி முறைகள் உள்ளன

by damith
September 18, 2023 7:10 am 0 comment

செனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். அதற்கான பல வழிமுறைகள் உள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார் நேர்காணொலொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். செனல் 4 ஒரு நம்பகதன்மையற்ற ஊடகம் எனவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்களென நன்கறியப்பட்டவர்கள் சனல் 4 ஊடகத்தினர் என தெரிவித்துள்ள அவர், இவர்களின் செய்திகள் நம்பகதன்மையற்றது எனவும் தெரிவித்துள்ளார்.

கேள்வி- 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து செனல் 4 சமீபத்தில் வெளியிட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?

பதில்- அவர்கள் தெரிவித்துள்ள விடயங்களிலுள்ள உண்மையை ஆராய்ந்து உறுதி செய்த பின்னர், அவர்களுக்கு எதிராக எங்களால் நடவடிக்கை எடுக்கமுடியுமென்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT