திருத்தம் செய்யப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷவின் பணிப்புரைக்கு அமைய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் மீண்டும் வர்த்தமானி யில் வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில் நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொழித்து, அதற்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது.
இது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு, கடந்த பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும் இச்சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள சில சரத்துக்கள் தொடர்பில், பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிப்பட்டன.இதையடுத்து அதனை திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.
அதன் பின்னர் பெற்றுக் கொள்ளப்பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கி புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், இ தற்கு எதிரான ஆட்சேபனைகளை உயர் நீதிமன்ற த்தில் மனுக்களாக தாக்கல் செய்ய முடியும் என்றும் அமைச்சர் விஜேயதாச ராஜபக்க்ஷ குறிப்பிட்டுள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)