பிரபல பெண்ணெழுத்தாளரும் பத்திரிகை கலைஞருமான சுரேக்கா நில்மினி இலங்கோனால் எழுதப்பட்ட ‘தியசித்தம்’ எனும் நூலின் முதற்பிரதி போக்குவரத்து பெருந்தெருக்கள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவிடம் அண்மையில் லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது வழங்கி வைக்கப்பட்டபோது எடுத்த படம். இது எழுத்தாளரின் 17ஆவது நாவலாகும்.
அடுத்தவர்களுக்காக உழைக்கும் தன்னலமற்ற மனிதர்கள் மற்றும் துன்பம், வேதனைகள் மற்றும் சவால்களுக்கிடையே வாழ்க்கைக்கு முகம் கொடுக்கும் தைரியமான பெண்ணைப் பற்றி இந்நாவலில் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிகழ்வில் லேக் ஹவுஸ் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் மற்றும் பணிப்பாளர் குழுவின் அனைத்து அங்கத்தவர்களுடன் லேக் ஹவுஸ் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.