Wednesday, September 27, 2023
Home » வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள்: நூறு பேர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள்: நூறு பேர் கைது!

by damith
September 18, 2023 6:40 am 0 comment

2023 இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகளுடன் தொடர்புடைய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொதுமுகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் இந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்பியமை தொடர்பிலும், தனிநபராக அல்லது குழுவாக வெளிநாட்டு தொழிலுக்கு அனுப்புவதாக தெரிவித்து பண மோசடியில் ஈடுபட்டமை தொடர்பிலும் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் 100 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் தனி நபர்களாக, குழுக்காளாக செயற்பட்ட 90 பேரும் அனுமதிப் பத்திரமின்றி வெளிநாட்டுக்கு பணியாளர்களை அனுப்புவதற்கு முற்பட்ட 0 9 நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதி பத்திரத்தை பெற்றுத் தவறாக செயற்பட்ட நிறுவனமொன்றின் உரிமையாளரும், இதில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT